எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கு 41 பேர் கட்டுப்பணம் செலுத்தியிருந்த போதிலும்,இறுதி நேரத்தில் ஆறுபேர், தங்களுடைய வேட்பு மனுக்களை தாக்கல் செய்யவில்லை.
இதனால், 35 பேர் மட்டுமே எதிர்வரும் தேர்தலில் போட்டியிடவுள்ளனர்.
அந்த 35 வேட்பு மனுக்களில் சிவாஜிலிங்கம், ஹிஸ்புல்லாவுக்கு எதிராகவே இரண்டு ஆட்சேபனைகள் தெரிவிக்கப்பட்டன. அவையும் நிராகரிக்கப்பட்டுவிட்டன.
இந்நிலையில், அந்த 35 வேட்பாளர்களில், கண்டி தலதா மாளிகையை தரிசிப்பதற்காக, முதலாவதாக ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸ செல்கிறார்.
தலதாமாளிகையில் வழிபடும் அவர், மநாயக்க தேரர்களை சந்தித்து ஆசீர்வாதம் பெற்றுக்கொள்வார்.