பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள அருவக்காடு குப்பைப் பிரிவில், நேற்றிரவு (07) பாரிய வெடிப்புச் சத்தங்கள் கேட்டுள்ளன.
இதனால், அண்மையில் வாழும் சேரக்குளி மற்றும் கரத்தீவு ஆகிய கிராமங்களைச் சேர்ந்த மக்கள் கடும் அச்சமடைந்துள்ளனர்.
வெடிப்புகளுடன் பாரிய சத்தங்கள் கேட்டமையால் அந்த மக்கள் பாரிய அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளனர் என அறியமுடிகின்றது.
கழிவுப் பகுதியில், மீதென் வாயு பரிசோதனை முதன்முறையாக முன்னெடுக்கப்பட்டது என அறியமுடிகின்றது.
அதனையடுத்தே, மேற்படி வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
நேற்றிரவு 8 மணிக்கும் 9 மணிக்கும் இடைப்பட்ட நேரத்திலேயே இந்த குண்டுவெடிப்பு இடம்பெற்றுள்ளது.
இந்த வெடிப்பினால், யாருக்கும் எவ்விதமான பாதிப்புகளும் ஏற்படவில்லை. எனினும், அங்கிருந்த பணியாளர்கள் அவ்விடத்திலிருந்து உடனடியாக வெளியேற்றப்பட்டனர்.
இந்நிலையில், கொழும்பிலிருந்து அருவாக்காட்டு பகுதிக்கு குப்பைகளை ஏற்றிக்கொண்டு அசன்ற 29 குப்பை டிப்பர்கள், ஜா-எல பகுதியில் வைத்து, கொழும்புக்கு திருப்பி அனுப்பப்பட்டமை குறிப்பிடத்தக்கது.