வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம். கே. சிவாஜிலிங்கத்தை நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கான ஏற்பாடுகளைச்செய்திருப்பது “மொட்டு” கட்சியின் ஸ்தாபகரான பசில் ராஜபக்ஷவே என மிக நம்பந்தகுந்த வட்டாரங்களிலிருந்து தெரிய வருகின்றது.
மொட்டு கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷவை பிரசாரங்களின் போது மிக மோசமான முறையில் தாக்குவதே பெசில் ராஜபக்ஷவினால் சிவாஜிலிங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ள பொறுப்பாகும் என்றும், இதன் ஊடாக சிங்கள மக்களைக் கோபமடையச் செய்து கோத்தாபய ராஜபக்ஷவுக்கு சாதகமான சூழ்நிலையினைப் பெற்றுக் கொள்வதற்கான தந்திர நடவடிக்கையே இது என்றும் அவ்வட்டாரங்கள் தெரிவித்தன.
சிவாஜிலிங்கம் சுமார் 50 ஆயிரம் தமிழ் மக்களின் வாக்குகளைப் பெற்றுக் கொள்வார் என கணிப்பீடு செய்துள்ள பெசில் ராஜபக்ஷ, அவருடனான அனைத்து ஒருங்கிணைப்புக்களையும் ஜே.வி.பியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிரிபால அமரசிங்கவிடம் ஒப்படைத்துள்ளார். பெசில் ராஜபக்ஷவின் வடக்கு கிழக்கின் பிரதான ஒருங்கிணைப்பாளரான சிரிபால அமரசிங்க, இம்முறை ஜனாதிபதி தோ்தலில் ஒரு டம்மி வேட்பாளராகப் போட்டியிடுகின்றமை குறிப்பிடத்தக்கது.