ஜனாதிபதித் தேர்தலுக்கான பிரசார பணிகள் சூடுபிடித்துள்ள நிலையில், தேர்தலுக்கான ஏற்பாடுகளும் மும்முரமாக இடம்பெறுகின்றன.
தேர்தலுக்கான வாக்காளர் அட்டைகளை அச்சடிக்கும் பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன.
அரச அச்சக கூட்டுத்தாபனத்தில் அப்பணிகள் முன்னெடுக்கப்படுவதனால், அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
அங்கு, பொலிஸ் அதிகாரிகள் 41 பேரடங்கிய விசேட குழுவொன்றும், பொலிஸ் சாவடியும் நிறுவப்பட்டுள்ளது என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அதிகாரி ருவன் குணசேகர தெரிவித்தார்.
24 மணிநேரம் தொடர்ச்சியாக இயங்கும் இந்த பொலிஸ் சாவடியில், பொரளை பொலிஸ் நிலையம் உள்ளிட்ட கொழும்பிலுள்ள பொலிஸ் நிலையங்களில் கடமையாற்றுவோர், இணை சேவைக்கு இணைக்கப்பட்டுள்ளன.
வாக்காளர் அட்டைகளை அச்சடிக்கும் பணிகள் நிறைவடைந்ததன் பின்னர், பொலிஸ் பாதுகாப்புடன் அவை விநியோகிக்கப்படும் என்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.