web log free
May 11, 2025

சந்திரிகாவுடன் 5 எம்.பிக்கள் சஜித்துக்கு ஆதரவு

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஐவர், புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவுக்கு ஆதரவளிப்பதற்கு தீர்மானித்துள்ளனர் என அறியமுடிகின்றது. 

இவர்கள் ஐவரும், முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவுக்கு ஆதரவானவர்கள் ஆவர். 

சந்திரிகாவுடன் சென்றிருந்த அந்த ஐவருக்கும், சஜித் பிரேமதாஸவின் முக்கியஸ்தர்கள் இருவருக்கும் இடையில் பத்தரமுல்லையில் வோட்சேஜ் ஹோட்டலில் நேற்றிரவு முக்கிய சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. 

 

Last modified on Saturday, 19 October 2019 13:40
© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd