ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் எம்.பிக்கள் உள்ளிட்ட 76 முக்கியஸ்தர்கள், புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவுக்கு ஆதரவளிப்பதற்கு தீர்மானித்துள்ளனர்.
அதில், மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர்கள், உள்ளூராட்சி மன்றங்களின் முன்னாள் உறுப்பினர்கள், தொகுதி அமைப்பாளர்கள் உள்ளிட்டோரும் அடங்குகின்றனர்.
அமைச்சர் மங்கள சமரவீரவின் வீட்டுக்குச் சென்றிருந்த அவர்கள், ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவளிக்கமாட்டோம் என்றும், ஐக்கிய தேசிய முன்னணிக்கே ஆதரவளிப்போம் என்றும் தெரிவித்துள்ளனர்.
அதன்போது, புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவும் உடனிருந்துள்ளார்.
அந்த 76 பேரில், சகல மாவட்டங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர்களும் இருந்துள்ளனர்.
இந்நிலையில், சகல தேர்தல் தொகுதிகளிலிருந்தும் தனக்கு ஆதரவளிக்கவிருக்கும், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் முக்கியஸ்தர்களை, விரைவில் தான் சந்திப்பேன் என்று, சஜித் பிரேமதாஸ இதன்போது தெரிவித்துள்ளார்.
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து வருகைதருவோரை ஒங்கமைப்பதற்காக, ஒருங்கிணைப்பாளராக துசித ஹல்லொழுவ நியமிக்கப்பட்டுள்ளார்.