web log free
November 28, 2024

த.ம.விடுதலைப் புலிகள், கோத்தாவுக்கு ஆதரவு

கிழக்கு மாகாணத்தில் தமிழர்களின் இருப்பு, நிலம் நிர்வாகம் பொருளாதாரம் தமிழர்கள் ஒடுக்கப்பட்டு வரும் என்ற நிலைமையில் கிழக்கு மாகாணத்தை கட்டிக்காக்க வேண்டிய ,மீட்க வேண்டிய பொறுப்பு மிக்க அரசியல் கட்சி என்ற வகையில் கிழக்கு மாகாணத்தில் மக்கள் நலன் சார்ந்து தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷ ஆதரிப்பது என தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கட்சியின் செயலாளர் பூ,பிரசாந்தன் தெரிவித்தார்.

 கிழக்கு மாகாணத்தில் மக்கள் நலன் சார்ந்த தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியினால் இன்று இடம்பெற்ற கட்சியின் தலைவர் பணிக்குழு செயற்குழு மற்றும் பொதுச் சபைக் கூட்டத்தின் அடிப்படையில் கட்சியின் தொண்டர்கள் ஆளும் கட்சியின் தலைமை நடைபெற இருக்கின்ற ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷவை ஆதரிப்பது என்ற தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது

கட்சியினால் மக்களின் வலுவாக்கம். அபிவிருத்தி கல்வி கலை கலாச்சார பொருளாதார ரீதியான தயாரிக்கப்பட்டுள்ள தேர்தல் விஞ்ஞாபனத்தில் இணைத்துக் கொள்வதற்கு தேவையான உடன்படிக்கை இன்றைய தினம் கைச்சாத்திடப்பட்டு நாங்கள் அவர்களுடன் பேசி வந்த அடிப்படையில் எதிர்வரும் காலங்களில் அதற்கான உடன்படிக்கை கைச்சாதிட உள்ளோம்.

ஜனாதிபதி வேட்பாளர் வெளிநாட்டிற்கு சென்ற காரணத்தினால் உடன்படிக்கை செய்ய முடியாமல் உள்ளது இருந்தாலும் அவர்களுடன் பேசிய அடிப்படையில் அவர்கள் ஒரு இணக்கப்பாட்டிற்கு வந்துள்ளனர் என்றார்.

மட்டக்களப்பு வாவிக்கரை வீதியிலுள்ள தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி காரியாலயத்தில் இன்று சனிக்கிழமை (12) இடம்பெற்ற ஊடக மாநாட்டில் இவ்வாறு கட்சியின் செயலாளர் பூ,பிரசாந்தன் தெரிவித்தார்

கிழக்கு மாகாணத்தின் மாகாண சபை ஒட்டுமொத்தமாக இருக்கிற மாகாணசபை அதிகாரங்களை முழுமையாக வழங்க வேண்டும்.

அதே போன்று கிழக்கு மாகாணத்தில் இருக்கின்ற மக்கள் போராட்டத்தால் பாதிக்கப்பட்டு இருக்கின்ற போராளிகள் யுத்தத்தால் கணவனை இழந்த பெண் தலைமைத்துவ குடும்பங்கள்.

சீரழிந்து இருக்கின்ற கல்வி கலை கலாசார பொருளாதார நில ஆக்கிரமிப்பு தொடர்பான அனைத்து விடயங்களிலும் உடன்பாட்டின் அடிப்படையில் கிழக்கு மாகாண மக்களின் நன்மைகருதி இந்த தீர்மானம் எடுக்கப்பட்டிருக்கின்றது.

2008 முதல் 2012 வரை இதே மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்தோடு இணக்கப்பாடு செய்திருந்தோம் தலைவர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தலைமையில் மாகாண சபை ஆட்சியை தமிழர் விடுதலைப் புலிகள் கட்சி செய்துகாட்டி இருந்தது அந்த வேளையில். அதன் அடிப்படையில் ஒட்டுமொத்தமாக முடிந்த அளவிற்கு ஒரு இன ஒற்றுமையை மேற்கொண்டு அபிவிருத்தி பணிகளை செய்திருந்தோம்

அந்த அடிப்படையில் நாட்டின் ஜனாதிபதி கிழக்கு மாகாணத்தைப் பற்றி சிந்திக்க வேண்டும். கிழக்கு மாகாணத்திலுள்ள பிரச்சனைகளை தீர்க்க கூடியதாக இருக்கவேண்டும்.

அதைவிடுத்து வெறுமனே நான்கு வருடம் நல்லாட்சி என்ற போர்வையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பும் அதனுடன் இணைத்து கட்சிகளும் கொண்டு வந்த நல்லாட்சியும் ஐக்கிய தேசிய கட்சி அரசும் இதுவரையில் கிழக்கு மாத்திரமல்ல ஒட்டுமொத்த தமிழர்களின் பிரச்சினைக்கு ஏதாவது தீர்வுகண்டிருக்கின்றதா? அது கேள்வி குறியாய் இருக்கிறது

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd