web log free
April 05, 2026

மைத்திரியின் மகன் பொதுத் தேர்தலில் போட்டி

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் மகன், தாஹம் சிறிசேன, எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிவுள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

பொலன்னறுவை மாவட்டத்திலிருந்தே அவர் போட்டியிடவுள்ளார் என அறியமுடிகின்றது.

பொலன்னறுவை மாவட்டத்தில் பல்வேறான சமூக சேவைகளில் அவர் ஈடுபட்டுள்ளார் என அறியமுடிகின்றது.

எனினும், பொதுத் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் இதுவரையிலும் பகிரங்கமாக அவர் அறிவிப்பு எதனையும் விடுக்கவில்லை.

அதேபோல, அவருடைய தந்தையான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், தன்னுடைய மகனின் அரசியல் பிரவேசம் தொடர்பில் இதுவரையிலும் வாய்த்திறக்கவில்லை. 

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd