ஜனாதிபதித் தேர்தலுக்கான அறிவிப்பு விடுக்கப்பட்டு, வேட்பு மனுக்களும் ஏற்றுக்கொள்ளப்பட்டு, தேர்தல் பிரசாரங்கள் சூடுபிடித்துள்ள நிலையில், அரசியலமைப்பு பேரவையின் புது அறிவிப்பினால் சகலரும் திக்குமுக்கு ஆடிபோயுள்ளனர்.
தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு தவிசாளர் ஒருவரே இருக்கின்றார்.
இந்நிலையில், தேர்தல்கள் ஆணைக்குழுவின் செயலாளர் நாயகம் ஒருவர் இன்றி, எந்தவொரு தேர்தலையும் நடத்த முடியாது. இது அரசியலமைப்பு முரணானது என அரசியலமைப்பு பேரவை தெரிவித்துள்ளது.
இதனால், தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் மஹிந்த தேசப்பிரிய புதுவகையான சிக்கலில் சிக்குண்டுள்ளார் என அறியமுடிகின்றது.
எனினும், தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டு, நேர்முகப் பரீட்சைகள் நடத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என அறியமுடிகின்றது.
எம். மொஹமட், ஓய்வு பெற்றதன் பின்னர் அந்தப் பதவிக்கு வேறு எவரும் இதுவரையிலும் நியமிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அவர், கடந்த மார்ச் மாதம், அப்பதவியிலிருந்து ஓய்வு பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.