web log free
July 31, 2025

5 ஆவது தடவையாகவும் கொழுவுவோம்


ஏதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ, பாராளுமன்ற கட்டடத்தொகுதியிலுள்ள எதிர்க்கட்சி அலுவலகத்தில் தன்னுடைய கடமைகளை இன்று (22) பொறுப்பேற்றுக்கொண்டார்.


தான் இந்த பதவியில் நீண்ட நாட்கள் இருக்கமாட்டேன் என்றும் இதன்போது மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.


இந்நிலையில், இதுவரை காலமும் எதிர்க்கட்சித் தலைவர்களாக பதவிவகித்தவர்களின் புகைப்படங்கள் கொழுவப்பட்டிருந்த இடத்துக்கு, மஹிந்த தலைமையிலான குழுவினர் சென்றனர். அப்போது, இங்கு உங்களுடைய படம் இரண்டு தடவைகள் மட்டுமே கொழுவப்பட்டுள்ளது.


பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, எதிர்கட்சித் தலைவராக நான்கு தடவைகள் பதவி வகித்துள்ளார். அவருடைய படத்தை ஐந்தாவது தடவையாகவும் கொழுவுவோம் என, தேசிய சுதந்திர முன்னணியின் எம்.பியான விமல் வீரவன்ச தெரிவித்துவிட்டார். அப்போது அங்கிருந்தவர்கள், ஆமாம் என்று சொல்வதைப் போல தலையசைத்தனர்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd