ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷவுக்கு, பலரும் ஆதரவளிப்பதாக செய்திகள் வெளியாகிக்கொண்டிருக்கின்றன.
இந்நிலையில், சுயேட்சையாக போட்டியிடும் கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர், ஏ.எல்.எம்.ஏ.ஹிஸ்புல்லாவும், கோத்தாவுக்கு ஆதரவளிப்பதாக அவ்வாறான செய்திகளில் தெரிவிக்கப்படுகின்றன.
அவர், கோத்தாபய ராஜபக்ஷவுக்கு எவ்விதத்திலும் ஆதரவளிக்க வில்லை என, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஊடகப் பேச்சாளர் டளஸ் அழகபெரும விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, பௌத்த தர்மத்தை கடுமையாக அவமதித்த, சிலோன் தௌஹீத் ஜமாஅத் அமைப்பை பிரதிநிதித்துவப்படுத்திய அப்துல் ராசிக் என்பவரும், கோத்தாபய ராஜபக்ஷவுக்கு ஆதரவளிப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
அந்த செய்திகள் யாவும் பொய்யாகும் என அந்த ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.




