ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவும் மற்றும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியும், இணைந்து எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஒன்றிணைந்து செயற்படுவது தொடர்பிலான யோசனையை நிறைவேற்றிக்கொள்வதற்கான கூட்டத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன திடீரென பங்கேற்றார்.
தொகுதி அமைப்பாளர்களின் கூட்டத்துக்கு திடிரென வந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, யாருடனும் கதைக்காமல், அவ்விடத்திலிருந்து சென்றுவிட்டார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
எவ்விதமான முன்னறிவித்தலும் இன்றி, யாரும் எதிர்பார்க்காத நிலையில், அந்த இடத்துக்கு வந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தொகுதி அமைப்பாளர்களின் மத்தியில் உரையாற்றுவார் என எதிர்பார்க்கப்பட்டது.
அதன் பின்னர் இடம்பெற்ற பகல்போசன விருந்துபசாரத்தில் பங்கேற்பார் என்றும் எதிர்பார்க்கப்பட்டது.
சகல எதிர்பார்ப்புகளையும் தவிடுபொடியாக்கிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தன்னுடைய கார் நிறுத்தப்பட்டிருந்த இடத்துக்கு நடந்தே சென்றுள்ளார்.
ஜனாதிபதியின் இந்த செயற்பாட்டினால், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தொகுதி அமைப்பாளர் புதுமையடைந்தனர்.