யுத்தத்தை நான் வழிநடத்தவில்லை. இராணுவத் தளபதியே வழிநடத்தினார்.
இறுதி யுத்தத்தின் போது, இராணுவத் தளபதியாக சரத் பொன்சேகாவே பதவி வகித்தார் என்பதை, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.
கொழும்பு, சங்கரில்ல ஹோட்டலில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைத்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இறுதி யுத்தத்தில் சரணடைந்து காணாமல் போனவர்கள் என சொல்லப்படுபவர்கள் தொடர்பில் எவ்விதமான ஆதாரங்களும் இல்லை.
ஐ.நாவின் யோசனைக்கு நான் அடிபணிய மாட்டேன். ஆனால், ஐ.நாவுடன் ஒத்துழைப்பு நல்கி, செயற்பாடுகளை முன்னெடுப்பேன் என்றார்.
யுத்தக் குற்றச்சாட்டுகளை பிடித்து அதிலேயே இருக்காமல், அதனை விடுத்துவிட்டு, அடுத்தக் கட்டத்துக்கு நகரவேண்டும் என்றார்.