தனக்கு கீழிருந்த தேசிய பொருளாதார சபையை இரத்து செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரமளித்துள்ளது.
இந்த சபை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கீழே இருந்துள்ளது.
அதற்கான அமைச்சரவைப் பத்திரம், வாராந்த அமைச்சரவைக் கூட்டத்தில் நேற்று 15 தாக்கல் செய்யப்பட்டது.
இதன்போதே அந்த அமைச்சரவைப் பத்திரத்துக்கு அங்கிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையின் கீழ் நடைபெற்ற பொருளாதார முகாமைத்துவ குழு தொடர்பில், ஜனாதிபதி அதிருப்தியுற்றிருந்தார்.
அதனை இரத்துச் செய்ததன் பின்னரே, தேசிய பொருளாதார சபை நிறுவப்பட்டது.
ஜனாதிபதியின் பதவிக்காலம் இன்னும் இரண்டுடொரு மாதங்களில் நிறைவடையவுள்ளது.
இந்நிலையிலேயே, தேசிய பொருளாதார சபையை அவர் இரத்து செய்துள்ளார் என அறியமுடிகின்றது.