வாகன விபத்தில் பொலிஸ் சார்ஜன்ட் ஜயமினி புஸ்பகுமார உயிரிழந்த சம்பவம் தொடர்பில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜே.ஸ்ரீரங்காவை கைதுசெய்யுமாறு சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா அறிவுறுத்தியுள்ளார்.
அவருடன், ஓய்வுப்பெற்ற பொலிஸ அத்தியட்சகர் உள்ளிட்ட ஐந்து பேரையும் கைதுசெய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு அறிவுறுத்தியுள்ளார். வவுனியா செட்டிக்குளம் பகுதியில் 2011ஆம் ஆண்டு மார்ச் மாதம் 31ஆம் திகதி இடம்பெற்ற வாகன விபத்தில், பொலிஸ் சார்ஜன்ட் ஜயமினி புஸ்பகுமார உயிரிழந்தார்.
அந்த சம்பவம் தொடர்பில் சட்டமா அதிபரால் இந்த ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் முன்னாள் நாடாளுன்ற உறுப்பினர் ஜே.ஸ்ரீரங்காவின் பாதுகாப்பு உத்தியோகத்தராக கடமையாற்றியிருந்தார். ரங்கா உள்ளிட்டவர்கள் பயணித்த ஜீப், மன்னார் திசை நோக்கி சென்றுக்கொண்டிருந்த நிலையில் வவுனியா செட்டிக்குளம் வைத்தியசாலைக்கு அருகில் , வீதியை விட்டு விலகி மதிலில் மோதி விபத்துக்குள்ளானது.