web log free
November 28, 2024

கோத்தாவுக்கு எதிராக மஹிந்த விசாரணை

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷவுக்கு எதிராக தேர்தல்கள் ஆணைக்குழு விசாரணைகளை முன்னெடுத்துள்ளது என அதன் தவிசாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.

இன்று (16) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இராணுவத் தளபதி சவேந்திர சில்வாவின் புகைப்படத்துடன் கூடிய தேர்தல் பிரசார நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டதாக, முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது தொடர்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவ்வாறு விளம்பரம் படுத்தப்பட்டிருந்தால் அது தவறாகும்.

இதுதொடர்பில் விளக்கமளிக்குமாறு, பாதுகாப்பு அமைச்சின் செயலாளருக்கு அறிவுறுத்துவோம். அதேபோல, இராணுவத் தளபதியின் விளக்கத்தையும் கோரியுள்ளோம்” என்றார்.

Last modified on Saturday, 19 October 2019 02:00
© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd