web log free
May 13, 2024

ஐ.தே.க முக்கியஸ்தர் கோத்தாவுக்கு ஆதரவு

ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கியஸ்தர் ஒருவர், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷவுக்கு ஆதரவளிப்பதற்கு தீர்மானித்துள்ளார் என மிக முக்கியமானத் தகவல்கள் தெரிவித்துள்ளன.

அவர், இன்று அல்லது நாளை, கோத்தாபய ராஜபக்ஷவுடன் இணைந்துகொள்வார் என நம்பகரமானத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

கோத்தாவுக்கு ஆதரவாளிக்க விருப்பவர், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுடன் கடந்தகாலங்கில் கடுமையான கருத்து முரண்பாடுகளை கொண்டிருந்தார் என்றும் அந்தத் தகவல்கள் தெரிவித்தன. 

கோத்தாபய ராஜபக்ஷவின் தேர்தல் பிரசாரத்திலும் ஒன்றிணைந்த எதிரணியின் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடும் முக்கியஸ்தர்களுடனும், ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கியஸ்தர்களுடனும் அந்த நபர் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார் என அறியமுடிகின்றது.

அவர், பாராளுமன்றமன்ற உறுப்பினர் என்பது மட்டும் உறுதியாகிவிட்டது.

ஐக்கிய தேசியக் கட்சியின் அந்த பாராளுமன்ற உறுப்பினருடன் இணைந்து இன்னும் சிலரும் கோத்தாவுக்கு ஆதரவளிக்கவுள்ளனர் என அந்தத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

Last modified on Friday, 18 October 2019 02:18