ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் அங்கம் வகித்த, உள்ளூராட்சி மன்றங்களில் பல்வேறான பதவிநிலைகளில் இருந்த பலர், புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவுக்கு ஆதரவளிப்பதற்கு தீர்மானித்துள்ளனர்.
“கீழ் மட்டத் தலைவர்களின் கருத்துகளுக்கு செவிசாய்க்காது, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுடன் இணைந்தமையால், பல்வேறான நெருக்கடிகளுக்கு சுதந்திரக் கட்சி முகம் கொடுக்கிறது. சுதந்திரக் கட்சியின் முக்கியஸ்தர்கள் பொதுஜன பெரமுனவின் மேடையில் ஏறியபோது, ஹு சத்தமிட்ட கேலிசெய்கின்றனர்” என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
அவற்றை பொறுத்துக்கொள்ள முடியாமலே இந்தத் தீர்மானத்தை எடுத்தோம் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.
கண்டி மாவட்ட உடுநுவர பிரதேச சபையின் முன்னாள் தலைவர் பந்துல செனவிரத்ன உள்ளிட்ட குழுவினரே, சஜித் பிரேமதாஸவுக்கு ஆதரவளிக்கத் தீர்மானித்துள்ளனர்.
அவ்வாறு ஆதரவளிப்பதற்கு தீர்மானித்துள்ள சுதந்திரக் கட்சியின் குழுவில்,
அக்குறனை பிரதேச சபையின் உறு்பினர் எஸ்.எம். அஸ்வர், உடுநுவர பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் கெமுனு பண்டாரவும் அடங்குகின்றனர்.
அத்துடன், கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களின் போது, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தி, தேர்தலில் போட்டியிட்டவர்களும் இந்தக் குழுவில் அடங்குகின்றனர்.