web log free
November 28, 2024

கோத்தா கைதாவை தடுத்தேன்- விஜயதாஸ

கடந்த ராஜபக்ஷ அரசியின் முக்கியஸ்தர்களுக்கு எதிராகச் சட்டத்தை நடைமுறைப்படுத்தும் போது பொலிஸ் அதிகாரிகளுக்கும் மற்றும் நீதிமன்ற அதிகாரிகளுக்கும்

தடைகளை ஏற்படுத்தியதாக முன்னாள் நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ மீது அரசாங்கத்தினால் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை அவரது வாயினாலேயே  ஏற்றுக் கொண்டார்.

மொட்டு கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷவுக்கு ஆதரவை வழங்குவதற்காக விஷேட ஊடகவியலாளர் சந்திப்பை ஏற்பாடு செய்து கருத்து தெரிவித்த விஜேதாச ராஜபக்ஷ, கோத்தாபய ராஜபக்ஷ கைது செய்யப்படுவதை தான் தடுத்ததாகத் தெரிவித்தார்.

கடுமையான குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டிருந்த கோத்தாபய ராஜபக்ஷவை சட்டத்தின் பிடியிலிருந்து விடுவித்துக் கொள்வதற்கு நடவடிக்கை மேற்கொள்வது நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷவே என பாராளுமன்ற உறுப்பினர் பீல்ட்  மார்சல் சரத் பொன்சேனா அந்நேரம் தொடர்ந்தும் குற்றம் சுமத்தி வந்திருந்தார்.

கடந்த ஆட்சியின் முக்கியஸ்தர்களுக்கு எதிராகச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதை தடுப்பதாக ஐக்கிய தேசிய கட்சியின் பின்வரிசை உறுப்பினர்களும் விஜேதாச ராஜபக்ஷ மீது குற்றம் சுமத்தியிருந்ததோடு, அவரை அமைச்சுப் பதவியிலிருந்து நீக்குமாறும்  பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் அழுத்தங்களைக் கொடுத்து வந்தனர்.

 இதனையடுத்து அவரை அமைச்சுப் பதவியிலிருந்து நீக்குவதற்கு பிரதமரின் ஆலோசனையின் பேரில் ஜனாதிபதி நடவடிக்கை மேற்கொண்டதோடு அந்நேரத்திலிருந்து அவர் அரசாங்கத்துடன் முரண்பாட்டுக் கொண்டிருந்தார்.

இந்நிலையில் விஜேதாச ராஜபக்ஷ நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது, கோத்தாபயவுக்கு ஆதரவை வழங்குவதாகவும்,  நாடு முழுவதிலும் சென்று கோத்தாபயவின் வெற்றிக்காரப் பாடுபடப் போவதாகவும் தெரிவித்துள்ளார்.

எவ்வாறிருந்த போதிலும் இவர் கடந்த ஒக்டோபர் 26ம் திகதி இடம்பெற்ற பிரதமர் மாற்றத்தின் போது பாராளுமன்றத்தின் ஆதரவு கிடைக்காத பலவந்தமான அரசாங்கத்தில் விஜேதாச ராஜபக்ஷ மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவை வழங்கியதோடு அவருக்கு அமைச்சுப் பதவியும் வழங்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd