நீதிமன்றத்தை அவமதித்தார் என்றக் குற்றச்சாட்டின் கீழ் வெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள கலகொட அத்தே ஞானசார தேரருக்கு எதிர்வரும் சுதந்திர தினத்தன்று, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பொதுமன்னிப்பு வழங்கவேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அந்தக் கோரிக்கையை ஜனாதிபதி நிறைவேற்றுவார் என, சுதந்திரக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த திஸாநாயக்க ஆருடம் கூறியுள்ளார்.'
இந்நிலையில், மரண தண்டனை கைதியான முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவுக்கு பொதுமன்னிப்பு வழங்குவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தயாராகிவருகின்றார் என, ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பெர்னாண்டோ குற்றஞ்சாட்டினார்.
பாராளுமன்றத்தில் உரையாற்றி ஹிருணிகா, போதைப்பொருள் மற்றும் மனித படுகொலையுடன் தொடர்புடைய துமிந்தவுக்கு ஜனாதிபதி எவ்வாறு பொதுமன்னிப்பு வழங்குவார் என்றும் அவர் கேள்வியெழுப்பினார்.