web log free
November 25, 2024

ஹஜ் யாத்திரர்களுக்கு வாய்ப்பு


ஏ.எச்.ஏ. ஹுஸைன்


கிழக்கு மாகாண ஆளுநர் ஏ.எச்.எம். ஹிஸ்புழ்ழாஹ், முஸ்லிம் சமய கலாசார அமைச்சராக பதவி வகித்த அந்த இரண்டுவார குறுகிய காலத்தில் எடுத்த முயற்சியின் பயனாக, ஹஜ் கோட்டா 3,500 ஆக அதிரிக்கப்பட்டுள்ளது.

சஊதி அரபியே அரசாங்கத்தின் இலங்கைகான தூதுவர் அஷ்ஷேய்க் நாசர் அல்ஹாலித் அவர்களுடனும் முஸ்லிம் சமய கலாசார ஆலோசகர் ராபிததுல் ஆலமி அல் இஸ்லாமி. செயலாளர் கலாநிதி ஈஸாயி , சஊதி இளவரசர் முக்ரின் உட்பட பல தரப்பினர்களோடு பேசியதன் பயனாகவே இந்த கோட்டா அதிகரிக்கப்பட்டுள்ளது.

இலங்கைக்கு இதுவரை காலமும் 2,500 ஹஜ் கோட்டா வழங்கப்பட்டிருந்தது. கிட்டத்தட்ட 13, 000 பேர் ஹஜ் செல்ல விண்ணப்பித்திருந்தும் ஹஜ் செல்வதற்கான வாய்ப்பு கிடைக்காமலே இருந்தனர்.

கோரிக்கையை பரிசீலித்த சஊதி அரசு, இலங்கையின் ஹஜ் கோட்டாவை 3,500 ஆக அதிகரிக்க தீர்மானித்துள்ளதாகவும் இது தொடர்பான இதற்கான உடன்படிக்கை கைச்சாத்திடுமாறு இலங்கை அரசாங்கத்திற்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.

அந்த வேண்டுகோளை, சஊதி தூதுவர் காத்தான்குடிக்கு விஜயம் செய்து உத்தியோகபூர்வமாக முன்னாள் அமைச்சரான. ஆளுநர் ஹிஸ்புழ்ழாஹ்வுக்கு தெரிவித்திருந்தமை விசேட அம்சமாகும்.

இது தொடர்பாக ஆளுனரிடம் வினவிய போது, இரண்டு வாரம் காலம் இந்த அமைச்சை பொறுப்பேற்றிருந்தேன். அந்த குறுகிய காலத்துக்குள் ஹஜ் கோட்டா தொடர்பில் நான் எடுத்திருந்த முயற்சி வெற்றியளித்துள்ளது. அதற்காக, அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்துகிறேன் என்றார்.

Last modified on Tuesday, 22 January 2019 23:03
© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd