இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க, தேர்தல் பிரசார மேடையில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷவைப் போல் நடித்து காண்பித்தும், மக்களால் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதிலளித்தும் காண்பித்துள்ளார்.
இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.
உரையாற்றிக்கொண்டிருந்த அவர், கோத்தாபய ராஜபக்ஷ, மேடைகளில் எவ்வாறு உரையாற்றுகின்றார். ஊடகவியலாளர் சந்திப்பில் கேட்கப்பட்ட கேள்விக்கு எவ்வாறு பதிலளித்தார்.
முன்னதாக, அங்கு குழுமியிருந்த ஆதரவாளர்களிடம் கண்ணாடியொன்றை கேட்ட அவர்,
தம்பி அந்த கண்ணாடியை தாருங்கள். அதனை வாங்கி அணிந்துகொண்டார்.
குடையொன்றையும் தாருங்கள். அதனையும் பிடித்துக்கு கொண்டு தலையை, அசைத்து, அசைத்து மேடைக்கு வந்து குடையை கொடுத்துவிட்டு.
நான்தான் கோத்தாபய ராஜபக்ஷ என்னிடம் கேள்விகளை கேளுங்கள்.
பத்திரிகையாசிரியர் லசந்தவை கொன்றது யார் என மக்கள் கேட்கின்றனர்.
பலத்த குரலில் சிரித்து காட்டுகின்றார்.
மீண்டும் மக்கள் கேட்கின்றனர். எக்னெலிகொடவை கொன்றது யார்?
மீண்டும் பலமாக சிரிக்கிறார்.
கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தில், ஊழியரை கொன்றது யார்?
அங்கும் இங்கும் திரும்பி ஐயா கோ, ஐயா கோ, (அண்ணன் எங்கே, அண்ணன் எங்கே?) எனத் தேடுகின்றார்.
இறுதியாக ஆங்கிலத்தில் உரையாற்றும் அவர், “ கடந்ததை மறப்போம், எதிர்காலத்தை கருத்தில் கொள்வோம்” என்றார்.
இது அமெரிக்காவல்ல. இது இலங்கை அவருடைய பேச்சி யாருக்கும் புரியவில்லை. நமது மக்களுக்கு அது பிரச்சினையில்லை என்றார் ரஞ்சன் ராமனாயக்க.
இந்நிலையில் மக்கள் கூட்டத்திலிருந்த ஒருவர், சஜித் பிரேமதாஸ ஜனாதிபதி ஆவது உறுதி, அவ்வாறு ஜனாதிபதியானால், மேலே சொல்லப்பட்ட சம்பவங்களுக்காக கோத்தாபய ராஜபக்ஷவை கைதுசெய்வாரா? என வினவினார்.
அதற்கு பதிலளித்த ரஞ்சன் ராமனாயக்க, “சஜித்திடம் டீல் போட யாராலும் முடியாது“ என்றார்.