சேனா படைப்புழுவின் தாக்கத்தை கட்டுப்படுத்தி, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கும் பயிற்ச்செய்கையாளர்களுக்கும் நட்டஈடு வழங்வேண்டும் என பாராளுமன்றத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்த நிலையில், சேனா படைப்புழுவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துகொண்டே செல்கின்றது.
சேனா படைப்புழுவின் தாக்கம் தொடர்பில் விசேட கூற்றொன்றை விடுத்து உரையாற்றியிருந்த எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ,
1. சேனா படைப்புழுவை கட்டுப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டும்.
2. பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நட்டஈடு வழங்கவேண்டும்.
3. அடுத்த போகத்துக்கான விதைகள் மற்றும் பசளைகளை இலவசமாக வழங்கவேண்டும்.
4. அடுத்த போக அறுவரை நிறைவடையும் வரையிலும் வாழ்வாதாரத்துக்கு நிவாரணம் வழங்கவேண்டும்.
5. விவசாயகத்துக்காக ஏற்கெனவே பெற்றிருந்த கடனை இரத்துச் செய்யவேண்டும்.
உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து அறிக்கையொன்றை விடுத்திருந்தார்.
அதற்கு பதிலளித்திருந்த அரசாங்கம், சேனா படைப்புழுவின் தாக்கம், எதிர்கொள்ளவேண்டிய நடவடிக்கைகள், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு வழங்கப்படவேண்டிய நிவாரணம் உள்ளிட்டவை தொடர்பில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெற்ற விசேட கூட்டத்தில் அவதானம் செலுத்தப்பட்டது.
அத்துடன், அமைச்சரவைக் கூட்டத்தின் போதும், அதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுப்பதற்காக, பல்வேறான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன என்றது.
இந்த படைபுழு, சோளம், கரும்பு, குரக்கன், உழுந்து உள்ளிட்ட பயிர்களையே தாக்கியழித்துவருகின்றது. இந்நிலையில், கோவா, நோக்கோல் உள்ளிட்ட மரக்கறி பயிர்ச்செய்கையின் மீதும் தாக்கத்தைச் செலுத்தி பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.