தேர்தலில் இனவாதத்தை விற்க முஸ்லிம் தலைவர்கள் சிலர் முயற்சிக்கின்றனர்.
இவர்கள் அரசியல் விபச்சாரம் செய்கிறார்களா? அல்லது அரசியல் வியாபாரம் செய்கிறார்களா ?
என்று மேல் மாகாண ஆளுநர் முஸம்மில் கேள்வியேழுப்பினார் பொதுஜன பெரமுன கட்சியின் கல்முனை அலுவலகத்தில் ஊடகவியலாளர் சந்திப்பொன்று இன்று (24) இடம்பெற்றது.
இதன் போது மேலும் அவர் தெரிவித்ததாவது நாட்டின் எதிர்காலத்திற்கும் விசேடமாக முஸ்லிம் மக்களுக்கு மிக முக்கியம் வாய்ந்த தேர்தலாகவே நான் கருதுகிறேன்.
பிரதானமாக கோட்டாபய ராஜபக்ச மற்றும் சஜித் பிரேமதாச ஆகியோர் வேட்பாளர்களாக களமிறங்கியுள்ளனர் .
இந்த இரண்டு பேரில் யார் இந்த நாட்டை சரியாக கொண்டு செல்லக்கூடியவர் என்பதை நாம் உணர்ந்து தெரிவு செய்ய வேண்டும் என்றார்.