web log free
July 01, 2025

மணியில் பிளவு- அன்னத்துடன் 400 பேர் இணைந்தனர்

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் சஜித் பிரேமதாசாவுக்கு  மக்கள் விடுதலை முன்னணியின் உறுப்பினர்கள் பலர் ஆதரவை வழங்குவதற்கு இணக்கம் தெரிவித்துள்ளார். 

ஜே.வி.பியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அஞ்ஜான் உம்மாவுடன்  மேல் மாகாண சபையின் மக்கள் விடுதலை முன்னணி உறுப்பினர் எராஜ் கிருஷாந்த அல்விஸ், வடமத்திய மாகாண சபையின் மக்கள் விடுதலை முன்னணி முன்னாள் உறுப்பினர் அநுர திசாநாயக்கா, வடமேல் மாகாண சபையின் மக்கள் விடுதலை முன்னணி முன்னாள் உறுப்பினர் சமன் புஷ்பகுமார ஆகியோரே இவ்வாறு சஜித் பிரேமதாசாவுக்கு ஆதரவு வழங்கியுள்ளார். .

கொழும்பு பொது நூலக கேட்போர் கூடத்தில் நேற்று (22) இடம்பெற்ற சமூக நீதிக்கான  சிகப்பு நட்சத்திர மக்கள் சக்தி, ஜனநாயக இடதுசாரி அமைப்பின் தேசிய மாநாட்டின் போதே இவர்கள் இவ்வாறு இணைந்து கொண்டுள்ளனர்.


மக்கள் விடுதலை முன்னணியிலிருந்து விலகிய அக்கட்சியின் உறுப்பினர்களைக் கொண்ட சிகப்பு நட்சத்திர மக்கள் சக்தி அமைப்பின் சுமார்  400 பேர் புதிய ஜனநாயக முன்னணியின் வேட்பாளர் சஜித் பிரேமதாசாவுக்கு ஆதரவு வழங்கியுள்ளனர். அவர்களும் சஜித்துடன் நேற்று போது இணைந்து கொண்டனர்.

Last modified on Friday, 25 October 2019 03:59
© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd