web log free
May 03, 2024

“75 ரூபாய்க்கு தேங்காய் விற்க முடியாது”

தேங்காய்க்கு விதிக்கப்பட்டிருந்த உச்சபட்ச சில்லறை விலை ரூ. 75ஐ நீக்குவதற்கு நுகர்வோர் விவகார அதிகார சபை தீர்மானித்துள்ளது.

இது தொடர்பான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலை சபை வெளியிட்டுள்ளது.

போட்டிமிக்க சந்தையை உருவாக்கும் நோக்கில் இவ்வாறு கட்டுப்பாட்டு விலையை நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.

ஏதேனும் வகையில் வர்த்தகர்களுக்கு அநாவசிய விலையில் தேங்காயை விற்பனை செய்ய நடவடிக்கை எடுத்தால், மீண்டும் தேங்காய்க்கு கட்டுப்பாட்டு விலையை அமுல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என, நுகர்வோர் விவகார அதிகார சபை சுட்டிக்காட்டியுள்ளது.

2003 ஆம் ஆண்டின் 09 ஆம் இலக்க, பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபைச் சட்டத்தின் 20 (5) ஆம் பிரிவினால் பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபைக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் கீழ் இந்தக் கட்டளையின் மூலம் 2017, டிசம்பர் மாதம் 06 ஆந் திகதிய 2048/ 30 ஆம் இலக்க அரசாங்க அதிவிசேட வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டுள்ள 48 ஆம் இலக்கக் கட்டளையில் ''தேங்காய்" எனும் வகை நீக்கப்படுவதாக குறித்த வர்த்தமானியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபையின் தலைவர் கலாநிதி லலித் என். செனவீரவினால் விடுக்கப்பட்டுள்ள குறித்த வர்த்தமானி அறிவித்தலில், இக்கட்டளையானது, நேற்று (23) முதல் நடைமுறைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Last modified on Thursday, 24 October 2019 16:57