web log free
May 03, 2024

சுஜித்தை மீட்கும் பணியில் ரிக் இயந்திரம்

ஆழ்துளை கிணற்றில் சிக்கியுள்ள சுர்ஜித்தை மீட்பதற்காக ரிக் இயந்திரம் பொருத்தப்பட்டு, குழி தோண்டும் பணி தொடங்கியது. 3 மீட்டருக்கு பதில் 2 மீட்டர் தொலைவில் குழி தோண்டப்படுகிறது

ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை முதலில் 26 அடியில் இருந்த நிலையில், தற்போது படிப்படியாக கீழே இறங்கி 100 அடி ஆழத்திற்கு சென்றுவிட்டது. ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தையை மீட்கும் பணி 25 மணி நேரத்திற்கும் மேலாக நீடிக்கிறது.

திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்த இரண்டரை வயது குழந்தை சுஜித் வின்செனை மீட்பதற்கு இதுவரை எடுத்த முயற்சிகள் வெற்றிகரமாக அமையவில்லை.

இரவு முழுவதும் மேற்கொண்ட முயற்சிகள் பலனளிக்காததால், இப்போது தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் அங்கு வரவழைக்கப்பட்டு சிறுவனை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

மண்சரிவால் குழந்தை மேலும் ஆழத்துக்கு சென்றது கவலையடைய வைக்கும் செய்தியாக உள்ளது.

நாடு முழுவதும் பல்வேறு இடங்களில், இதற்கு முன்பு ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தைகளை தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் வெற்றிகரமாக மீட்டுள்ளனர். இப்போதைய முயற்சியும் வெற்றியில் முடிந்து சிறுவன் சுஜித் மீட்கப்படுவான் என்ற நம்பிக்கை உள்ளது.

இந்நிலையில், ஆழ்துளை கிணற்றில் சிக்கிக்கொண்ட ஒரு குழந்தையின் மனநிலை எப்படியிரும், மீட்கப்பட்டபின் அக்குழந்தை அனுபவித்த விபத்துக்கு பிந்தைய அதிர்ச்சியில் இருந்து வெளிக்கொண்டுவர என்ன செய்ய வேண்டும் என்று குழந்தைகள் நல மருத்துவரும், CHES அமைப்பின் நிறுவனருமான பி. மனோராமா பிபிசி தமிழின் மரிய மைக்கேல் உடன் பேசினார்.

அவர் தெரிவித்த கருத்துகளை தொகுத்து வழங்குகிறோம்.

திடீரென இவ்வாறு ஒரு குழந்தை ஓர் ஆழ்துளை கிணற்றில் விழும்போது, எங்கே போய் சேரும், என்ன நடந்தது, யார் செய்த தவறு, என்ன நடக்கும், என்று எதுவும் அதற்கு புரியாது என்கிறார் மனோரமா.