web log free
May 21, 2026

கோத்தாவுக்கு எதிராக யாழில் போராட்டம்

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷ, யாழ்ப்பாணத்துக்கு இன்று விஜயம் செய்யவுள்ளார்.

அவருடன் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவும் விஜயம் செய்யவுள்ளார். 

ஜனாதிபதித் தேர்தலில் வடக்குக்கான தேர்தல் பிரசாரத்தை அவ்விருவரும் யாழ்ப்பாணத்தில் இன்று ஆரம்பிக்கவுள்ளனர்.

அத்துடன், முக்கியமான மத வழிபாட்டு ஸ்தலங்களுக்கும் விஜயம் செய்யவுள்ளனர். 

இந்நிலையில், அவருடைய வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து, யாழ்ப்பாணத்தில் கண்டன ஆர்ப்பாட்டமொன்றை நடத்துவதற்கு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 

கிட்டுப் பூங்காவிலேயே இந்த ஆர்ப்பாட்டம். இன்று முற்பகல் 10.30க்கு முன்னெடுக்கப்படவுள்ளது. 

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd