நீதிமன்றம் உத்தரவிட்டால் தன்னுடைய பதவிக்காலத்துக்குள் ஒருவரையேனும் தூக்கிலிடுவேன் என சவால் விட்டிருந்தார் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன.
இந்நிலையில், மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களால் தாக்கல் செய்யப்பட்டிருந்த அடிப்படை மனித உரிமை மீறல் மனுக்கள் தொடர்பிலான இடைக்கால தடையுத்தரவு, உயர்நீதிமன்றத்தினால், டிசெம்பர் 10ஆம் திகதி வரைக்கும் நீடிக்கப்பட்டுள்ளது.
முழு அமர்வு பெஞ்ச் நீதியரசர்கள் கொண்ட குழாமை, இந்த 15 மனுக்களையும் ஆராய்வதற்கு நியமிக்கப்படுவது தொடர்பில் இன்று (29) ஆராயப்பட்டது.
இதன்போதே, ஏற்கனவே விதிக்கப்பட்டிருந்த தடையுத்தரவு நீடிக்கப்பட்டுள்ளது. இதனால், தன்னுடைய பதவிக்காலத்துக்குள் தூக்குத் தண்டனையை நிறைவேற்ற முடியாத நிலைமைக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தள்ளப்பட்டுள்ளார் என்ற கருத்து பரவலாக உள்ளது.