ஆளும் தரப்பினரும் எதிரணியினரும் ஏட்டிக்குப் போட்டியாக சதிக்குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளன.
கருணா, பிள்ளையான் ஆகியோரின் கீழ் முன்னர் செயற்பட்ட இயக்கம் சார்ந்தவர்கள் களமிறக்கப்படும் அபாயம் நிலவுவதாக வாக்குகளை கொள்ளையடிக்கும் சதித்திட்டம் தீட்டகப்படுவதாகவும் அமைச்சர் ஹக்கீம் குற்றம் சாட்டியுள்ளார்.
ஐரோப்பிய ஒன்றியத்தின் தேர்தல் கண்காணிப்பு குழுவிவுக்கும் அமைச்சருக்கும் இடையில் இன்று (29) இடம்பெற்ற சந்திப்பிலேயே மேற்கண்டவாறு எடுத்துரைத்துள்ளார்.
இதேவேளை, உயிர்த்த ஞாயிறுத்தாக்கல் தொடர்பிலான குற்றச்சாட்டுகளை முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷவின் மீது சுமத்தி அவரை கைது செய்வதற்கும், கிறிஸ்தவ வாக்குகள் கோத்தாவுக்கு கிடைக்கவிடாமல் செய்வதற்கும் ஐக்கிய தேசியக் கட்சி சதித்திட்டம் தீட்டியுள்ளது என ஒன்றிணைந்த எதிரணியின் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்பன்பில தெரிவித்தார்.