நாடளாவிய ரீதியில் நிலவும் கேஸ் தட்டுப்பாடு காரணமாக, 3500க்கும் மேற்பட்ட உணவகங்கள், ஹோட்டல்கள், உணவு தயாரிப்பு நிலையங்கள் மூடப்பட்டுள்ளன என அகில இலங்கை உணவகங்கள்களின் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்தள்ளார்.
அன்றாடம் வீடுகளில், இடியப்பம், வடை, சமோசா, கடலை, புட்டு, ரொட்டி ஆகியவற்றை தயாரத்து விற்பனைச் செய்யும் பெரும்பாலானோரும் பாதிக்கப்பட்டுள்ள, பல்வேறான அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்துள்ளனர்.
பொருளாதார ரீதியும் அவர்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர் என்றும் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.
கேஸ் பிரச்சினைக்கு அரசாங்கம் தலையிட்டு தீர்க்கவில்லையெனில், ஹோட்டல்கள், உணவகங்களின் உரிமையாளர்கள், அரசாங்கத்துக்கு எதிராக எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கும் தீர்மானித்துள்ளனர் என அறியமுடிகிறது.