ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் கூடிய வாராந்த அமைச்சரவையில், நாட்டில் ஏற்பட்டிருக்கும் கேஸ் தட்டப்பாட்டை நிவர்த்தி செய்தல் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.
நாட்டு மக்களுக்கு இவ்வாறு இடையூறுகள் விளைவிக்கக்கூடாது. முன்கூட்டியே நடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டும் என ஜனாதிபதி கடுந்தொனியில் அறிவுறுத்தியுள்ளார் என அறியமுடிகின்றது.
அதற்கு பதிலளித்த அமைச்சர் மங்கள சமரவீர, கேஸ் கொள்கலன்கள் அடங்கிய கப்பல்கள் வந்துகொண்டிருக்கின்றன. இன்னும் ஒரு வாரத்துக்குள் அப்பிரச்சினையை தீர்க்க முடியும் என அமைச்சரவையின் கவனத்துக்கு கொண்டுவந்தார்.
சவுதி அரேபியாவில் காஸ் களஞ்சிய சாலைகளின் மீது, ட்ரோன் கமெராவின் ஊடாக தாக்குதல் நடத்தப்பட்டமையால், கேஸ் ஏற்றுவதில், அந்நாடு கட்டுப்பாடுகளை விதித்துள்ளன. ஆகையால் கேஸ் இறக்குமதி செய்வதில் சிக்கல்களை எதிர்கொண்டதாக, அமைச்சரவையின் கவனத்துக்கு மங்கள சமரவீர கொண்டுவந்தார்.