web log free
May 09, 2025

உறுதியளித்தார் சஜித்- விரதத்தை கைவிட்டார் பிக்கு

அமெரிக்க அரசாங்கத்துடன் கைச்சாத்திட தீர்மானித்துள்ள மிலேனியம் சாவல்கள் ஒப்பந்தத்திற்கு (Millennium Challenge Cooperation – MCC)  எதிராக உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுத்திருந்த  உடுதும்பர காஷ்யப்ப தேரர் உண்ணாவிரதப் போராட்டத்தை கைவிட்டுள்ளார். 

கொழும்பு, சுதந்திர சதுக்கத்திலேயே  உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்திருந்தார். 

ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டாம் என ஜனாதிபதியிடமிருந்து, பிரதமருக்கு உத்தரவிடப்படும் வரை உண்ணாவிரதத்தை தொடரவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

எனினும், புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸ, ஜனாதிபதித் தேர்தல் எதிர்வரம் 16ஆம் திகதி நடைபெறவிருக்கிறது. அத்தேர்தல் நிறைவடையும் வரையிலும் ஒப்பந்தத்தில் கைச்சாத்திடப்படாது என எழுத்துமூலமாக உறுதியளித்துள்ளார்.

இதனையடுத்தே, உண்ணாவிரதப் போராட்டத்தை பிக்கு கைவிட்டுள்ளார். 

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd