web log free
May 05, 2024

“மஹிந்தவை விட நான் அழகு”

யுத்தத்தின் மூன்று பகுதிகளை தானே நிறைவு செய்தாக தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, யுத்தத்தை முழுமையாக நிறைவு செய்வதற்கு இன்னும் சிறிதளவு காலமே தனக்கு தேவைப்பட்டிருந்தாகவும் கூறினார்.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை பாதுகாக்கும் அமைப்பினால், கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் நேற்று (05) நடத்தப்பட்ட மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில், “எமது கட்சியை துண்டு துண்டாக்கிவிட்டனர். கட்சியின் பாதுகாவலராக நான் இருந்தாலும், கட்சியின் செயற்பாடுகளுடன் என்னை இணைத்துக்கொள்ளவில்லை.

“கட்சியின் தற்போதையை தலைவரே ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட வேண்டும் என, கட்சியின் நூற்றுக்கு 95 சதவீதமானவர்கள் கூறினார்கள்.

“கட்சியின் பெரும்பான்மையானவர்களின் கருத்தினை நிராகரித்து, செயலாளர் உள்ளிட்ட ஒருசிலர் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுடன் இணைந்தனர்.

“கட்சி என்பது நாட்டை பாதுகாக்க வேண்டும். எனது கருத்து என்னவென்றால், இவ்வாறான சந்தர்ப்பத்தில் நபர்களை சிந்திப்பதைவிட கொள்கைகளை பற்றியும் சிந்திக்க வேண்டும்.

“2015ஆம் ஆண்டு அந்தவிதத்தில் தான் நான் தீர்மானம் மேற்கொண்டேன். நாட்டை கட்டியெழுப்ப முடியும் என்பதால் அந்த தீர்மானத்துக்கு வந்தேன்.  இரண்டு இரண்டு பிரதான வேட்பாளர்கள் உள்ளனர்.

“நான் யுத்தத்தின் மூன்று கட்டங்களை நிறைவு செய்தேன். நான் தருவித்த ஆயுதங்களை கொண்டே யுத்தம் செய்தனர்” என்றார்.

நான் ஏமாற்றமாட்டேன். கள்வர்களை எனக்கு பிடிகாது, போலிசாயம் பூசுபவர்கள் என்னருகில் வைத்திருக்கமாட்டேன் என்றார்.

மஹிந்தவை விடவும் நான் அழகானவள். என்னுடைய பிள்ளைகள் அவர்களின் பிள்ளைகளைவிடவும் நன்றாக படித்திருக்கின்றார்கள். எனக்கு எந்தவிதமான குறையும் இல்லை. சுதந்திரக் கட்சியை காப்பாற்றவே, நான் மீண்டும் இங்குவந்தேன் என்றார்.