ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷ, அமெரிக்க பிரஜையா அல்லது இலங்கைப் பிரஜையா அவருடைய இரட்டை குடியுரிமை நீக்கப்பட்டுள்ளதா இன்றேல் இல்லையா என்பது தொடர்பிலான சர்ச்சைக்கு இன்னுமே முற்றுப்புள்ளி வைக்கப்படவில்லை.
அமெரிக்காவின் திறைசேரி திணைக்களத்தின் தேசிய வருமான வரிச் சேவையினால் வெளியிடப்படும் அந்நாட்டின் குடியுரிமை நீக்கிக் கொள்ளப்பட்டவர்களின் புதிய பெயர் பட்டியல், அதாவது 2019ம் ஆண்டின் நவம்பர் மாதப் பெயர் பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
குடியுரிமை நீக்கிக் கொள்ளப்பட்ட அந்தப் பட்டியலில் குறிப்பிடப்பட்டவர்கள் இனிமேல் அமெரிக்காவுக்கு வருமான வரி செலுத்த மாட்டார்கள் என அந்தப் பெயர் பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அந்தப் பெயர் பட்டியலிரும் நந்தசேன கோத்தாபய ராஜபக்ஷவின் பெயர் குறிப்பிடப்பட்டிருக்கவில்லை. எனவே கோத்தாபய இன்னமும் அமெரிக்காவுக்கு வருமான வரி செலுத்தும் அமெரிக்க பிரஜையாகும்.
அவர் தனது குடியுரிமையினை நீக்கிக் கொண்டிருந்தால் இப்போது வெளியிடப்பட்டுள்ள பெயர்ப் பட்டியலில் அவரது பெயர் வெளியிடப்பட்டிருக்க வேண்டும். அப்போதுதான் குடியுரிமை சட்டரீதியாக விலக்கிக் கொள்ளப்பட்டிருக்கும்.
அமெரிக்காவில் குடியுரிமை நீக்கிக் கொள்ளப்பட்ட அனைவர் தொடர்பான பட்டியலை மூன்று மாதங்களுக்கு ஒரு தடவை வெளியிட அமெரிக்க அரசாங்கம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அமெரிக்க சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதில் குறிப்பிடப்படுவது வருடத்திற்கு நான்கு தடவைகள் அவ்வாறான பட்டியல் வெளியிடப்படும் என்பதேயாகும்.