ஜனாதிபதியின் பதவிக்காலம் எதிர்வரும் 17ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளது.
இந்நிலையில், அவர் பங்கேற்கும் இரண்டு முக்கிய கூட்டங்கள் இடம்பெறவுள்ளன.
அதன்பின்னர், நாட்டு மக்களுக்கு எதிர்வரும் 15ஆம் திகதி விசேட அறிவிப்பொன்றை அவர் நாட்டு மக்களுக்கு விடுவார் என அறியமுடிகின்றது.
இந்நிலையில், ராஜகிரிய ரோயல் பார்க் சொகுசு குடியிருப்புத் தொகுதியின் படிக்கட்டுக்களில் வைத்து, 2005 ஆம் ஆண்டு ஜூன் 30 ஆம் திகதி தனது காதலியின் சகோதரியான 19 வயதுடைய இவோன் ஜொன்சன் எனும் யுவதியை கழுத்தை நெரித்தும், தலையை தரையில் அடித்து மண்டை ஓட்டினை 64 இடங்களில் சேதப்படுத்தியும் கொடூரமாக கொலை செய்தான் ஜூட் ஸ்ரீமந்த என்டனி ஜயமஹவுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொதுமன்னிப்பு வழங்கிய விவகாரத்துக்கு கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
இதற்கிடையில், ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவின் கொழும்பிலுள்ள கட்டிடத்தில் நேற்றிரவு தீ பரவல் ஏற்பட்டுள்ளது.
இதில், முச்சக்கரவண்டியொன்றும், 47 மோட்டார் சைக்கிள்களும் எரிந்து நாசமாகியுள்ளன.
இது, ஜனாதிபதிக்கு சகுனம் சரியில்லை என்பதையே எடுத்து காட்டுகிறது என, தகவல்கள் வெளியாகியுள்ளன.