ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷ, அமெரிக்க குடியுரிமையை துறந்தது தொடர்பிலான ஆவணங்களை தேர்தல்கள் ஆணைக்குழுவில் கையளித்துள்ளார் என,
அவருடைய சட்டத்தரணி அலி சப்ரி, கொழும்பு கிங்ஸ்பரி ஹோட்டலில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், அவ்வாறான எந்தவொரு ஆவணங்களும் தங்களுக்கு சமர்ப்பிக்கப்படவில்லை என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
இதேவேளை, கொழும்பு- 2இலுள்ள புதிய ஜனநாயக முன்னணியின் தேர்தல் பிரசார அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைத்த சுயேட்சையாக போட்டியிடும் ஜனாதிபதி வேட்பாளர் மில்ரோய் பெர்ணான்டோவும்,
கோத்தாவின் அமெரிக்க குடியுரிமை நீக்கிக்கொள்ளப்பட்டமை தொடர்பிலான ஆவணங்களை, தேர்தல்கள் ஆணைக்குழுவில் கோரியிருந்ததாகவும், அவ்வாறான ஆவணங்கள் எவையும் தம்மிடம் சமர்ப்பிக்கவில்லை என ஆணைக்குழு பதிலளித்தது என்றும் தெரிவித்துள்ளார்.