தான் ஜனாதிபதியாக பதவி வகித்த காலத்தில், தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் எனக்கு எழுதிய 42 கடிதங்கள் என்வசம் உள்ளன. அதனை வெளிப்படுத்துவதற்கு தான் தயார் என, முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
நான், ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டதன் பின்னர், சில மாதங்கள் கழித்து, புலிகளுடன் சுமார் 8 மாதங்கள் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தினேன். எனினும், 8 மாதங்களின் பின்னர் புலிகள் யுத்தத்துக்குச் சென்றனர். அந்த எட்டுமாத சமாதான காலத்தில், எனக்கும் பிரபாரனுக்கும் இடையில் பகிரப்பட்ட 42 கடிதங்களை நான் அம்பலப்படுத்துவேன் என்றார்.
யுத்தத்தை செய்வதாயின் நீங்கள் செய்யுங்கள், ஆனால், பொதுமக்களுக்கு எவ்விதமான பாதிப்புகளும் ஏற்படாத வகையில், யுத்தத்த நாங்கள் முன்னெடுப்போம் என்று நான் தெரிவித்திருந்தேன். மக்களுக்கு அபிவிருந்தி வேண்டும். எனினும், ஜனாதிபதி என்ற வகையில், நான் யுத்தம் செய்யவேண்டிய நிலைமை ஏற்பட்டது. அது தவிர்க்கமுடியாது.
எனது காலத்தில், புலிகள் வசமிருந்த பகுதிகள் மீட்கப்பட்டு, அப்பிரதேசங்களை நாங்கள் அபிவிருத்தி செய்தோம் என்றார்.