பெருந்தோட்டங்களை நிர்வகிக்கும் நிர்வனங்கள், 1992 ஆம் ஆண்டிருந்த நிலைமைக்கும் இன்றிருக்கும் நிலைமைக்கும் வித்தியாசம் காணப்படுகின்றது. பெரும் இலாபங்களை ஈட்டும் அந்நிறுவனங்கள் அதனை, தொழிலாளர்களுக்கு பகிர்ந்தளிக்கவேண்டும். அந்த நிறுவனங்களிடம் நாங்கள் பிச்சை கேட்கவில்லை என இ.தொ.கா தலைவர் ஆறுமுகன் தொண்டமான் எம்.பி தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற சபை ஒத்திவைப்புவேளை பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
போக்குவரத்து கொடுப்பனவு, உணவு கொடுப்பனவு உள்ளிட்டவை அடங்கலாக 1,000 ரூபாய் தங்களுக்கு வேண்டாம். ஊழியர் சேமலாப நிதி, ஊழியர் நம்பிக்கை நிதி அடங்களாக, நாளொன்றுக்கு அடிப்படைச் சம்பளம் 1,000 ரூபாய் வேண்டும் என்றும் தெரிவித்தார்.
மேற்படி சம்பள உயர்வு விவகாரம் தொடர்பிலான அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தை நாளை (25) இடம்பெறும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.