web log free
May 11, 2025

கணவனை கொன்ற மனைவி சிக்கினார்

மட்டக்களப்பு – வாழைச்சேனை, கண்ணகிபுரம் பகுதியில் கணவனை பொல்லால் தாக்கி கொலை செய்த மனைவி கைதுசெய்யப்பட்டுள்ளார்.

மனைவியுடனான வாய்த்தர்க்கம் வலுப்பெற்றதைத் தொடர்ந்து, கணவர் தனது மகனை கூரிய ஆயுதத்தால் தாக்க முற்பட்ட போது,  அதனை தடுக்கும் நோக்கில் மனைவி, தனது கணவனை பொல்லால் தாக்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்தில் காயமடைந்த 36 வயதான நபர், வாழைச்சேனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதுடன்,காயமடைந்த 16 வயதான மகனும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதனையடுத்து, சம்பவத்துடன் தொடர்புடைய மனைவி கைது செய்யப்பட்டுள்ளார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd