ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷவுக்கு சேறுபூசும் வகையில், தகவல்கள் அடங்கிய கையேடுகளை விநியோகித்தனர் என்றக் குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டு, விளக்கமறியல் வைக்கப்பட்டிருந்த இருவரின் விளக்கமறியலையும் நீடிக்குமாறு நுகேகொட பதில் நீதவான் சுனேத்ரா நாணயக்காக உத்தரவிட்டார்.
இவ்வாறு, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளவர்களில் ஒருவர், இராஜாங்க அமைச்சர் ஹர்ஷ டி சில்வாவின் செயலாளர் என்பது குறிப்பிடத்தக்கது.
மிரிஹான விஜயசேகர மாவத்த பிரதேசத்தில் சேறுபூசும் வகையில், கையேடுகளை விநியோகிப்பதாக, பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவல்களை அடுது்து, அவ்விருவரும் கடந்த 10ஆம் திகதி கைதுசெய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து, சேறுபூசும் வகையிலான விவரங்கள் அடங்கிய கையேடுகளும் கைப்பற்றப்பட்டன.
அவ்வாறு கைதுசெய்யப்பட்ட இருவரும் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில், இன்று (14) வரையிலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டு, இன்று, மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். இதன்போதே பதில் நீதவான் மேற்கண்டவாறு உத்தரவிட்டுள்ளார்.