web log free
April 05, 2026

60 ஆயிரத்து 175 பொலிஸார் கடமையில்

 

ஜனாதிபதி தேர்தல் பிரச்சார நடவடிக்கைக்காக காலம் முடிவடைந்த நிலையில் அமைதி காலம் ஆரம்பமாகி உள்ளது.

இந்நிலையில் நாடு முழுவதும் விசேட பாதுகாப்பு நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நாடு முழுவதும் முக்கிய இடங்களில் கலகம் அடக்கும் பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவண் குணசேகர தெரிவித்துள்ளார்.

பாதுகாப்பினை உறுதி செய்வதற்காக மேலதிக பொலிஸ் வீதித் தடைகளை மேற்கொள்ளவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி தேர்தலுக்கான முழுமையான பாதுகாப்பிற்காக 60175 பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவண் குணசேகர மேலும் தெரிவித்துள்ளார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd