ஜனாதிபதித் தேர்தல் தொடர்பிலான ஒருதொகை போஸ்டர்களை தம்வசம் வைத்திருந்த, பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணியின் சிலாபம் அமைப்பாளர், இன்று (15) கைதுசெய்யப்பட்டுள்ளார் என மாதம்பே பொலிஸார் தெரிவித்தனர்.
அவருடைய வீட்டிலிருந்து 3850 போஸ்டர்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.
பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்தே அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
அந்த போஸ்டர்களுடன் சந்தேகநபரை, சிலாபம் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவித்தனர்.