web log free
May 04, 2024

விமலின் அமைப்பாளர் கைது

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பிலான ஒருதொகை போஸ்டர்களை தம்வசம் வைத்திருந்த, பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச ​தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணியின் சிலாபம் அமைப்பாளர், இன்று (15) கைதுசெய்யப்பட்டுள்ளார் என மாதம்பே பொலிஸார் தெரிவித்தனர்.

அவருடைய வீட்டிலிருந்து 3850 போஸ்டர்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்தே அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

அந்த போஸ்டர்களுடன் சந்தேகநபரை, சிலாபம் ​நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவித்தனர்.