web log free
March 23, 2026

கோத்தாவுக்கு மாரடைப்பு?

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷவுக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்து, போலியான செய்திகளை பரப்புவதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன என, பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்தார்.

போலியான அந்த செய்தியை, இறுதி​நேரத்தில் பரப்புவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன என்றும் அவர் குறிப்பிட்டார்.

அவ்வாறான செய்திகள் பரப்பப்படுமாயின் அதனை நம்ப வேண்டாமென்றும், இது ஐக்கிய தேசியக் கட்சியினால் தயாரிக்கப்பட்ட போலியான செய்தியாகும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd