web log free
February 03, 2026

சஜித்தும் இல்லாத கூட்டத்தில் பெரும் குழப்பம்

 

ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்றக் குழுக் கூட்டம் பாராளுமன்ற கட்டிடத்தொகுதியில் கூடியபோதும் எவ்விதமான முடிவும் எட்டப்படவில்லை. எனினும், கூட்டத்தில் கடுமையான வாதப்பிரதிவாதங்கள் முன்வைத்தமையால் அக்கூட்டத்தில்  பெரும் அமளி, துமளி ஏற்பட்டது.

பிரதமர் பதவியிலிருந்து விலகி, கட்சித் தலைவர் பதவியையும் எதிர்க்கட்சித் தலைவர் பதவியையும் சஜித்துக்கு வழங்கவேண்டுமென சஜித் ஆதரவு எம் பிக்கள், ரணிலுடன் தர்க்கம் செய்ததையடுத்தே இந்த அமளிதுமளி ஏற்பட்டது.

இந்த கூட்டத்தில், சஜித் பிரேமதாஸ கலந்துகொள்ளவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd