web log free
May 11, 2025

மூவருக்கு “ஹூ”- தடுத்தார் மஹிந்த

 

புதிய ஜனாதிபதியாக பதவிப்பிரமாண செய்துகொண்ட கோத்தாபய ராஜபக்ஷவின் பதவியேற்பு விழாவுக்கு, ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் சென்றவர்களுக்கு எதிராக, அங்கிருந்தவர்கள் ஹூ சத்தமெழுப்பி, கிண்டல் செய்தனர்.

இதனால், அங்கு சற்று சலசலப்பு ஏற்பட்டது. எனினும், அவ்விடத்துக்கு வருகைதந்த எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ, ஆதரவாளர்களை நோக்கி கையை அசைத்து, அவ்வாறு செய்யக்கூடாது எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.

அங்கு, அமைச்சர்களான ரவி கருணாநாயக்க, ஜோன் அமரதுங்க, வஜிர அபேவர்தன ஆகியோர் அந்த வைபவத்துக்கு சென்றிருந்தனர்.

இந்த பதவிப்பிரமாணம் பதவியேற்பு வைபவத்துக்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் சென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Last modified on Wednesday, 20 November 2019 08:41
© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd