web log free
March 23, 2026

கருணாவுக்கு எதிராக சி.ஐ.டியில் முறைப்பாடு

தேர்தல் காலங்களின்போது இனவாதத்தை தூண்டும் விதத்தில் பிரச்சாரங்களை மேற்கொண்டதாக புலிகளின் முன்னாள் மட்டு-அம்பாறை தளபதி கருணா அம்மான் எனப்படுகின்ற விநாயகமூர்த்தி முரளிதரனுக்கு எதிராக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

பொது மக்களிடமிருந்து சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளின் பிரகாரம் குழுவின் உறுப்பினர் பேராசிரியர் ரட்ணஜீவன் கூல்  பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு செய்துள்ளதாக அறியமுடிகின்றது.

தனது முறைப்பாட்டுக்கு ஆதாரமாக கருணாவின் பேச்சுக்களின் ஒலி மற்றும் ஒளிப்பதிவுகளை சமர்ப்பித்துள்ளதாக பொலிஸ் தலைமையக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அத்துடன் குறித்த முறைப்பாடு பொலிஸ் தலைமையகத்திலிருந்து குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு மாற்றபட்டுள்ளதாக தெரியவருகின்றது.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd