எதிர்வரும் 29ஆம் திகதி இந்தியாவுக்கு விஜயம் செய்யும் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ, தன்னுடைய இரண்டாவது வெளிநாட்டு விஜயமாக, பாகிஸ்தானுக்கு செல்வார் என எதிர்பார்க்கப்படுகின்றது.
தங்களுடைய நாட்டுக்கும் விஜயத்தை மேற்கொள்ளுமாறு, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அழைப்பு விடுத்திருந்தார்.
அதடினடிப்படையிலேயே, பாகிஸ்தானுக்கு இரண்டாவது விஜயத்தை மேற்கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
நேற்று மாலை கொழும்பு வந்து மூன்று மணி நேரமே தங்கியிருந்த இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்ஷங்கர் , கொழும்பில் ஜனாதிபதி கோத்தாபய, பிரதமர் ரணில் ,எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த , பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ச ஆகியோரை சந்தித்துப் பேச்சு நடத்தினார்.
கோத்தாபயவை அவரது மிரிஹான வீட்டிலும் , மஹிந்தவை அவரது விஜேராம இல்லத்திலும் , ரணிலை அலரி மாளிகையிலும் , பசிலை இந்திய தூதுவரின் வாசஸ்தலத்திலும் சந்தித்த ஜெய்ஷங்கர். டில்லிக்கு புறப்பட்டுச் சென்றுவிட்டார்.
எதிர்வரும் 29 ஆம் திகதிக்குப் பின்னர், அல்லது ஓரிரு வாரங்களுக்குள் பாகிஸ்தான் பிரதமரின் பிரதிநிதியொருவர் இலங்கைக்கு வருகைதரவுள்ளார் என அறியமுடிகின்றது.