காபந்து அரசாங்கத்தின் அமைச்சரவை, இன்று (20) பதவியேற்க உள்ளது. அந்த அமைச்சரவையில், 13 அல்லது 15 பேர் மட்டுமே அமைச்சர்களாக பதவிவகிக்கவுள்ளனர்.
அதில், இரண்டு அமைச்சுப் பதவிகள் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கு வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஏனைய அமைச்சுப் பதவிகள், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் வசமே இருக்கும்.
அதிலும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் ஆறுமுகன் தொண்டமான், ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம், டக்ளஸ் தேவானந்தா ஆகியோருக்கு, அமைச்சுப் பதவிகள் கிடைக்குமென எதிர்பார்க்கப்படுகின்றது.